-விழிப் பார்வையால்-


உன் 
விழிப் பார்வை 
புரியாமல்தான்
விழுந்து கிடக்கின்றேன்
விதியென்னும்
குழிக்குள்ளே.!

- உயிரோடு புதைத்து விட்டாய் -உன்னோடு வருவேன் என்றவளே..! 
ஏனடி?
உயிரோடு என்னை புதைத்துச் செல்கின்றாய். ?

- கரங்கள் துடிக்கின்றது -

என் 
புகைப்படம் பார்த்து 
இரவில் கண்ணீர்விடாதே 
உன் 
கண்ணீரைத் துடைக்க 
புகைப்படத்தில் உள்ள 
என் கரங்கள் துடிக்கின்றது.


- நட்பென்ற நூல் -


என் இதயக் கிழிசல்களை
தைத்துக் கொண்டிருக்கின்றேன்,
இன்னொரு இதயத்தின் உதவியோடு,
காதலின்றி
நட்பென்னும் நூல் கொண்டு.

- எப்படி மறப்பது உன்னை -என்னை மறந்து விடு என
தினமும்
மறக்காமல் சொல்லும் உன்னை
எப்படி மறப்பது நான்.

- நீயே வேண்டும் -


உன்னை மறக்கும் நொடியே
இறக்க வேண்டும்.
இறந்த பின்பும்
இதயம் துடிக்க வேண்டும்.
துடிக்கும் இதயம்
உன் பெயர் அழைக்கவேண்டும்,
அழைக்கும் குரலோ
ஜெலியாக இனிக்க வேண்டும்.

ஜெனியின் இதழாய்
ஆசைகள் மலரவேண்டும்,
அந்த மலரே
கழுத்துக்கு மாலையாக வேண்டும்.

- எனக்குள் நுழைந்தவள் -


என் இதயப் பூங்காவுக்குள்
எனக்காய் நுழைந்த சாரளவள். 
இதழ்களை உரசி
இன்பம் வார்க்கும் தூறளவள். 
செவிகளில் தேனைவார்த்து 
ராகம் சேர்க்கும் தேனியவள், 
தேவலோகப் பெண்ணாக
பூமி வந்த தேவதையிவள்.

Blogger templates

தொடர்புக்கு:-


இலவச மென்பொருள்கள் 88 அடங்கிய பகுதியிது..

Loadtr.Com

தரவிறக்கம் செய்யுங்கள்.

Loadtr.Com

என் உணர்புகளுக்கு உங்கள் கருத்து.

இதயச் சாரல்

Loadtr.Com
இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

சிதைந்த இதயம்

Loadtr.Com