- பருவம் தந்த ஜொரம் -


பருவ நிலா தவிக்கிறது -மேனி 
மெல்லமெல்ல மெலிகின்றது  
உணர்வென்ற போர்வைக்குள்ளே 
தன்னை 
உருக்குலைத்துக் கொள்கின்றது. 

கன்னியவள் மனதுக்குள்ளே 
கன்னிவெடி புதைக்கின்றாள்.  
காதல் போதை உண்டபின்பு 
கண்ணீர் ஏன் வடிக்கின்றாள். 

நெருங்கி வரத்துடிக்கும் 
குயிலின் குரல் மட்டும் ஒலிக்கின்றது. 
கோடை மழையில் தலைநனைந்து 
ஜொரம் என்னை வதைக்கின்றது.

- குளிர் தனிகிறது -


கொட்டும் பனி இறுக்கத்திலே 
கட்டியணைப்பவளே..!
உன் 
மூச்சுக் காற்றின் வெப்பத்தில்
என் 
தேகக் குளிர் தனிகிறது.

- புன்னகையால் பூ தூவு -


கார் கூந்தல் பெண்ணழகே..! 
காந்த விழிப் பேரழகே..! 
இளமை கிள்ளும் தென்றலே .! 
இதழோரப் புன்னகையால்  
என் இதயத்தில் பூ தூவிவிடு.

- என்றுதான் சொல்வேனோ -


ஒரு தலையாய் நான் 
சொல்லாது தோற்பதை விட 
என் காதலை 
சொல்லிவிட்டுத் தோற்றால் 
மனக் கவலை குறையும். 
என்றுதான் 
சொல்லப் போகின்றேனோ 
என் காதலை.
 I LOVE U.

- பதில் சொல் -



அன்று 
கனவைத் தந்தாய் 
பின்பு 
நினைவைத் தந்தாய்
இன்று 
நிழலைத் தருகின்றாய் 
நாளை 
என்ன தரப் போகின்றாய்?

- உடலைக் காட்டிக் கொல்லாதே -

கைக் கூட்டையில் ஆடை செய்து 
கடைத்தெருவில் போற பெண்ணே..! 
விடலை நெஞ்சத்தை ஏனடி 
உடலைக் காட்டிக் கொல்கிறாய்?

- திறந்த இதயம் -


மீண்டும் நீ வந்து தட்டுவாய்
என்ற நம்பிக்கையில் 
என் இதயக் காதவுகள்
திறந்தே இருக்கின்றது,
உன் வருகையை எதிர் பார்த்து.

Blogger templates

தொடர்புக்கு:-


இலவச மென்பொருள்கள் 88 அடங்கிய பகுதியிது..

Loadtr.Com

தரவிறக்கம் செய்யுங்கள்.

Loadtr.Com

என் உணர்புகளுக்கு உங்கள் கருத்து.

Loadtr.Com

இதயச் சாரல்

Loadtr.Com

சிதைந்த இதயம்

Loadtr.Com
Loadtr.Com