-விழிப் பார்வையால்-


உன் 
விழிப் பார்வை 
புரியாமல்தான்
விழுந்து கிடக்கின்றேன்
விதியென்னும்
குழிக்குள்ளே.!

- உயிரோடு புதைத்து விட்டாய் -உன்னோடு வருவேன் என்றவளே..! 
ஏனடி?
உயிரோடு என்னை புதைத்துச் செல்கின்றாய். ?

- கரங்கள் துடிக்கின்றது -

என் 
புகைப்படம் பார்த்து 
இரவில் கண்ணீர்விடாதே 
உன் 
கண்ணீரைத் துடைக்க 
புகைப்படத்தில் உள்ள 
என் கரங்கள் துடிக்கின்றது.


- நட்பென்ற நூல் -


என் இதயக் கிழிசல்களை
தைத்துக் கொண்டிருக்கின்றேன்,
இன்னொரு இதயத்தின் உதவியோடு,
காதலின்றி
நட்பென்னும் நூல் கொண்டு.

- எப்படி மறப்பது உன்னை -என்னை மறந்து விடு என
தினமும்
மறக்காமல் சொல்லும் உன்னை
எப்படி மறப்பது நான்.

- நீயே வேண்டும் -


உன்னை மறக்கும் நொடியே
இறக்க வேண்டும்.
இறந்த பின்பும்
இதயம் துடிக்க வேண்டும்.
துடிக்கும் இதயம்
உன் பெயர் அழைக்கவேண்டும்,
அழைக்கும் குரலோ
ஜெலியாக இனிக்க வேண்டும்.

ஜெனியின் இதழாய்
ஆசைகள் மலரவேண்டும்,
அந்த மலரே
கழுத்துக்கு மாலையாக வேண்டும்.

- எனக்குள் நுழைந்தவள் -


என் இதயப் பூங்காவுக்குள்
எனக்காய் நுழைந்த சாரளவள். 
இதழ்களை உரசி
இன்பம் வார்க்கும் தூறளவள். 
செவிகளில் தேனைவார்த்து 
ராகம் சேர்க்கும் தேனியவள், 
தேவலோகப் பெண்ணாக
பூமி வந்த தேவதையிவள்.

- பருவம் தந்த ஜொரம் -


பருவ நிலா தவிக்கிறது -மேனி 
மெல்லமெல்ல மெலிகின்றது  
உணர்வென்ற போர்வைக்குள்ளே 
தன்னை 
உருக்குலைத்துக் கொள்கின்றது. 

கன்னியவள் மனதுக்குள்ளே 
கன்னிவெடி புதைக்கின்றாள்.  
காதல் போதை உண்டபின்பு 
கண்ணீர் ஏன் வடிக்கின்றாள். 

நெருங்கி வரத்துடிக்கும் 
குயிலின் குரல் மட்டும் ஒலிக்கின்றது. 
கோடை மழையில் தலைநனைந்து 
ஜொரம் என்னை வதைக்கின்றது.

- குளிர் தனிகிறது -


கொட்டும் பனி இறுக்கத்திலே 
கட்டியணைப்பவளே..!
உன் 
மூச்சுக் காற்றின் வெப்பத்தில்
என் 
தேகக் குளிர் தனிகிறது.

- புன்னகையால் பூ தூவு -


கார் கூந்தல் பெண்ணழகே..! 
காந்த விழிப் பேரழகே..! 
இளமை கிள்ளும் தென்றலே .! 
இதழோரப் புன்னகையால்  
என் இதயத்தில் பூ தூவிவிடு.

- என்றுதான் சொல்வேனோ -


ஒரு தலையாய் நான் 
சொல்லாது தோற்பதை விட 
என் காதலை 
சொல்லிவிட்டுத் தோற்றால் 
மனக் கவலை குறையும். 
என்றுதான் 
சொல்லப் போகின்றேனோ 
என் காதலை.
 I LOVE U.

- பதில் சொல் -அன்று 
கனவைத் தந்தாய் 
பின்பு 
நினைவைத் தந்தாய்
இன்று 
நிழலைத் தருகின்றாய் 
நாளை 
என்ன தரப் போகின்றாய்?

- உடலைக் காட்டிக் கொல்லாதே -

கைக் கூட்டையில் ஆடை செய்து 
கடைத்தெருவில் போற பெண்ணே..! 
விடலை நெஞ்சத்தை ஏனடி 
உடலைக் காட்டிக் கொல்கிறாய்?

- திறந்த இதயம் -


மீண்டும் நீ வந்து தட்டுவாய்
என்ற நம்பிக்கையில் 
என் இதயக் காதவுகள்
திறந்தே இருக்கின்றது,
உன் வருகையை எதிர் பார்த்து.

- தேக வாசத்தால் -


தூங்க முடியவில்லை
கனவில் வந்தவளின் 

தேக வாசம் 

என் 
முச்சுக் காற்றோடு கலந்ததினால்.

- புரிந்து கொள்ளாமை -காதலில் நீ இலையுதிர் காலம்
நானோ
இலை தளீர் காலம்
நீ உதிர்கின்றாய்
நான் உதிக்கின்றேன்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்லாமல்.

- வார்த்தைகள் இல்லை -

       
 என்ன சொல்ல
எப்படிச் சொல்ல
உன்னைச் சொல்ல
வார்த்தைகள் ஒன்றும்
என்னிடம் இல்ல.                     

- தொல்லை செய்யாதே -


நுளம்பே..!
என் தூக்கம் கலைத்து விடாதே..!
நான் நிம்மதியாய்த் தூங்கவேண்டும்,
கனவில் வருவதாகச் 
சொல்லிச் சென்றாள் என் காதலி
மீண்டும் கதை பேச.-பிடிக்குமா-
உனக்கு 

என்ன பிடிக்குமென்றும் தெரியவில்லை.
என்னைப் பிடிக்குமா என்றும் புரியவில்லை....

-ஏங்கும் தொலைபேசி-


பாவம்.....
நான் தூங்கினாலும்
தூங்காமல் எனதருகில்- அவள்
அழைப்புக்காக விழித்திருக்கின்றது
என் கையடக்கத் தொலை பேசி.

- உணர்ந்த பின்பு உண்மை புலரும் -


மெல்ல மெல்லச் சாவதற்கு
காதலும் ஒரு வழி....
உணர்ந்த பின்பு தான் 
என் பிணம் சொன்னது.

- கனவில் மடி தந்தான் -


நானும் அவனும் தான்...
நான்
அவன் மடிமீது தலைவைத்தேன்.
ம்ம்ம்ம்..........
அவன்
இரு கைகளினாலும் 
என் தலை கோரியபடி...... 
பேசிக்கொண்டே நானவன் மடியில்
என் வாழ்வின் சொர்க்கம்......
ஆனால் அவன் பேசவில்லை.
என் கண்ணில் இருந்து நீர்த்துளிகள்.
ஏன் அழுகின்றேன் எனக்கே தெரியவில்லை,
அவன் மடியில் தானே தூங்குகின்றேன்.


இது நீடிக்காத ஒன்று
வெற்றி பெறாக் காதல்
என்னவனே..!
என்று எழுந்தேன்
கடவுளே..!
அது கூடக் கனவுதான்,
காதலனின் மடியின் 
தூக்கம் சுகம்தான்.

- இறந்த பின்பும் வாழவேண்டும் -என் உடலெரிந்த பின்பும் 
அவள் நினைவுகள் எரியவில்லை 
இறந்த பின்பும் அவளோடு 
வாழவேண்டும் என்பதற்காக...

- எதிர்பார்ப்பு -இன்று சனிக்கிழமை 

அவனுக்கு விடுமுறை
நான் அவனைப் பார்க்க வேண்டும்.
எனக்கு விடுமுறையில்லை.
இருந்தாலும்
மதிய இடைவேளையில்
அவன் முகம் பார்க்க
கணனி நோக்கி செல்கின்றேன்.
இருவரும் சந்தித்தோம்.
ஒரு மணிநேர இடைவேளியில் 
இருவர் கண்களும் கதைபேசின,
அப்போதுதான் நேரம் பார்த்தேன்
நாற்பத்தைந்து நிமிடங்கள் போய் விட்டது.
“ ஏதாவது பேசன்டா ”
”அப்புறம் ”சொன்னான்.
அதுவே வார்த்தை
இருவரும் பார்வையில் சொர்க்கம் கொண்டோம்.
நேரம் போய் விட்டது.
போக மனமின்றி விடைபெற்றேன்.

அடுத்த சனிக்கிழமையை எதிர்பார்த்து...

Blogger templates

தொடர்புக்கு:-


இலவச மென்பொருள்கள் 88 அடங்கிய பகுதியிது..

Loadtr.Com

தரவிறக்கம் செய்யுங்கள்.

Loadtr.Com

என் உணர்புகளுக்கு உங்கள் கருத்து.

இதயச் சாரல்

Loadtr.Com

சிதைந்த இதயம்

Loadtr.Com